
திருமுறை இசைப் பயிற்சி மையம்
பன்னிரு திருமுறைகள்•பண்ணிசை•திருப்புகழ்
திருமுறையின் வழியே இறைவனை உணர்வோம்!
அருளாளர்கள் அருளிச் செய்த திருமுறைகளையும் திருப்புகழையும் பண்ணிசையுடன் கற்றிடும் ஓர் ஆன்மிகப் பயணம்.
A spiritual journey to learn the sacred Thirumurai hymns and Thiruppugazh through traditional musical modes.
ஓதுவார் சிவத்திருஇளங்கோவன்
ILANGOVAN
பண்பாடு – கலாச்சாரம்
Culture, Tradition & Sacred Music
முறையான வாழ்வுக்கும் ஆன்மிகப் பயணத்திற்கும் வழிகாட்டும் திருமுறைகள்
சான்றோர்கள் போற்றும் அழகிய சொற்கள் பண்பாடு, கலாச்சாரம். இவ்விரு சொற்களும் நம் வாழ்வியலோடு நீண்டகாலமாக இணைந்துள்ளன.
“Panpaadu” and “Kalacharam” are cherished ideas that have long been part of our way of life and heritage.
பண்பாடு என்பது பண் என்ற முறைமையையும், பாடுதல் என்ற இசை வழியையும் நினைவூட்டுகிறது. வாழ்வில் தடம் மாறாமல், நெறிமுறையைப் பின்பற்றி வாழ்வதே பண்பாட்டின் உயரிய நோக்கமாகும்.
“Panpaadu” evokes musical mode and disciplined singing. At a deeper level, it reminds us to walk a principled path without losing our way in life.
ஒரு கலையை ஆச்சாரமாக ஏற்று, நியம நிஷ்டையுடன் அதன் வழியில் வாழ்ந்து கடைப்பிடிப்பதே கலாச்சாரத்தின் சிறப்பாகும்.
Culture finds its meaning when an art or tradition is embraced with reverence, discipline and steadfast practice.
தேவாரத் திருமுறைப் பாடல் வரிகள்
A Verse from the Thevaram Tradition
ஆரி யந்தமி ழோடிசை யானவன்
கூரி யகுணத் தார்குறி நின்றவன்
காரி கையுடை யான்கடம் பந்துறைச்
சீரி யல்பத்தர் சென்றடை மின்களே.
தேவாரத் திருமுறைகளில் பண் என்ற இசை முறைமை சிறப்பிடம் பெறுகிறது. அவற்றைப் பண்ணிசையுடன் பாடும் மரபும் நம் தமிழிசைப் பண்பாட்டின் அரிய செல்வமாகும்.
The musical modes known as “Pann” hold a special place in the Thevaram hymns. Singing these sacred works in their traditional modes is a precious part of Tamil musical heritage.
பன்னிரு திருமுறைகள், திருப்புகழ், அபிராமி அந்தாதி போன்ற அருளாளர்கள் அருளிச் செய்த நூல்கள், முறையான வாழ்வுக்கும் ஆன்மிக வளர்ச்சிக்கும் வழிகாட்டும் அருள்நூல்களாகத் திகழ்கின்றன.
The Twelve Thirumurai, Thiruppugazh and Abirami Anthathi, blessed to us by the great saints, serve as sacred guides for a virtuous life and spiritual growth.
இந்நூல்களை ஆர்வத்துடனும் ஆன்மிகப் பக்தியுடனும் கற்றுக்கொள்ள விரும்பும் இறையன்பர்கள் அனைவருக்கும் என் அன்பான முதல் வணக்கம்.
My heartfelt salutations to all devotees who wish to learn these sacred works with sincere interest and spiritual devotion.
சைவ சமயக் குரவர்கள்
சமயக் குரவர்கள் நால்வர்
தேவாரமும் திருவாசகமும் அருளி, தலங்கள் தோறும் சென்று இறைவனைப் பாடிய நால்வர் பெருமக்கள்.

திருஞானசம்பந்தர்
- அவதாரத் தலம்
- சீர்காழி
- திருமுறை
- 1, 2, 3
- நெறி
- சற்புத்திர மார்க்கம்
மூன்று வயதில் உமையம்மை அளித்த ஞானப்பாலை உண்டு, "தோடுடைய செவியன்" என்று முதல் பதிகம் பாடியவர். திருக்கோலக்காவில் இறைவனிடம் பொற்றாளம் பெற்றவர்.

திருநாவுக்கரசர்
(அப்பர்)
- அவதாரத் தலம்
- திருவாமூர்
- திருமுறை
- 4, 5, 6
- நெறி
- தாச மார்க்கம்
இறைவனால் "நாவுக்கரசு" என்று அழைக்கப்பெற்றவர். உழவாரப் படை ஏந்தி, தலங்கள் தோறும் திருப்பணி செய்து பாடியவர். சம்பந்தர் அவரை "அப்பர்" என்று அழைத்தார்.

சுந்தரமூர்த்தி நாயனார்
(சுந்தரர்)
- அவதாரத் தலம்
- திருநாவலூர்
- திருமுறை
- 7
- நெறி
- சக மார்க்கம்
திருமணத்தின்போது முதியவராக வந்த இறைவனால் தடுத்தாட்கொள்ளப்பட்டு "பித்தா பிறைசூடி" என்று பாடியவர். "தம்பிரான் தோழர்" எனப் போற்றப்படுபவர். அவர் பாடிய திருத்தொண்டத் தொகையே பெரியபுராணத்துக்கு வித்து.

மாணிக்கவாசகர்
- அவதாரத் தலம்
- திருவாதவூர்
- திருமுறை
- 8
- நெறி
- சன்மார்க்கம்
பாண்டிய மன்னனின் அமைச்சராக இருந்தவர். திருப்பெருந்துறையில் குருந்த மரத்தடியில் குருவாக வந்த இறைவனால் ஆட்கொள்ளப்பட்டு, திருவாசகமும் திருக்கோவையாரும் அருளியவர்.
சைவத் திருமுறைகள்
பன்னிரு திருமுறை

பன்னிரு திருமுறைகள் என்பவை சிவபெருமான் மீது 27 சைவப் புலவர்களால் பாடப்பட்ட 12 புனித நூல்களின் தொகுப்பாகும். இது சைவ சமயத்தின் முதன்மையான ஆன்மீக மற்றும் இலக்கியக் கருவூலமாகும்.
- சமயக் குரவர்கள்: முதல் எட்டுத் திருமுறைகளைப் பாடிய திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வரும் சைவ சமயக் குரவர்கள் எனப் போற்றப்படுகின்றனர்.
- 10-ஆம் நூற்றாண்டில் சிதம்பரம் கோயிலில் பூச்சிகளால் அரிக்கப்பட்டு எஞ்சியிருந்த ஓலைச்சுவடிகளை, இராசராச சோழனின் வேண்டுகோளுக்கு இணங்க நம்பியாண்டார் நம்பி தொகுத்தார்.
- திருமுறை கண்ட சோழன்: அழிந்து கொண்டிருந்த இப்பாடல்களை மீட்டெடுத்ததால் இராசராச சோழன் ‘திருமுறை கண்ட சோழன்’ எனப் போற்றப்படுகிறார்
பன்னிரு திருமுறைகளிலும் சேர்த்து மொத்தம் 18,280-க்கும் மேற்பட்ட பாடல்கள் உள்ளன.
சிவபெருமானின் அருளைப் பெற பண்ணிசையுடன் திருமுறைகளை பாட கற்போம்
அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ் இசைப் பயிற்சி

அருணகிரிநாதர்
திருவண்ணாமலையில் முருகப் பெருமானின் அருள் பெற்ற அருணகிரிநாதர், "முத்தைத்தரு பத்தித் திருநகை" என்று தொடங்கித் திருப்புகழைப் பாடினார்.
சந்த நயமும் தாள அழகும் நிறைந்த திருப்புகழ்ப் பாடல்களை, சந்தம் சிதையாமல் இசையுடன் பாடக் கற்போம்.
திருமுறை ஆசிரியர்

(15 ஆண்டுகள் அனுபவம்)
ஓதுவார் சிவத்திருஇளங்கோவன்
- கரூர் அரசு இசைப் பள்ளியில் 2011 முதல் 2014 வரை முறையாக இசை பயின்று, ஜூன் 2014-ல் முதல் வகுப்பில் சிறப்புத் தகுதியுடன் தேர்ச்சி பெற்றவர்.
- 2017 முதல் 2024 வரை காளையார்கோவில், பாகனேரி, கண்டதேவி, நேமம், மாத்தூர் ஆகிய திருக்கோயில்களில் ஓதுவாராகத் திருத்தொண்டு ஆற்றியவர்.
- 2021 முதல் இணையவழியாகத் திருமுறை, திருவாசகம், திருப்புகழ் வகுப்புகளை நடத்தி வருகிறார்.
திருக்கோயில் பணியில் பெற்ற அனுபவத்தோடு, பண்முறை மாறாமல் திருமுறைகளை அடுத்த தலைமுறைக்கு கற்பிப்பதே ஐயாவின் நோக்கம்.
இணையவழி வகுப்புகள்
பன்னிரு திருமுறை
திருவாசகம்
திருப்புகழ்
இணைய வகுப்புகளுக்கு தொடர்பு கொள்ளுங்கள்
ஓதுவார் சிவத்திரு இளங்கோவன்
ILANGOVAN